அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான வீஜே மகேஸ்வரி கணவருடனான விவாகரத்திற்கு பின் மகனுடன் அம்மா வீட்டில் வசித்து வருகிறார். மகேஸ்வரி தற்போது சீரியல், சினிமா என நடிப்பதோடு காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். சமீபகாலங்களில் மிகவும் கிளாமரான போட்டோஷூட்களை வெளியிட்டு வரும் மகேஸ்வரி குறித்து சிலர் ஆபாசமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அண்மையில் பேட்டியளித்துள்ள மகேஸ்வரி, 'என்னை பற்றியோ என் உடல் பாகங்களை குறித்தோ ஒரு நிமிடம் பேசும் ஒருவரை பார்த்து நான் கவலைப்பட்டு கொண்டிருக்க முடியாது. நான் என் மகனை சரியாக வளர்க்க வேண்டும். என் அம்மாவை பார்த்து கொள்ள வேண்டும். ஏகப்பட்ட வேலை இருக்கிறது. இதில் முகம் தெரியாத ஒரு நபர் வெட்டியாக போடும் கமெண்ட் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை' என்றார்.