'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

ஜீ தமிழில் ஒளிபரப்பான நளதமயந்தி தொடரில் நந்தா, ப்ரியங்கா நல்காரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். அந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், ப்ரியங்கா நல்காரிக்கு பதிலாக ஸ்ரீநிதி புதிய ஹீரோயினாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இதனையடுத்து ப்ரியங்கா நல்காரி தான் சீரியலை விட்டு விலவில்லை, ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்று ஷாக் கொடுத்தார். அதேபோல் ஸ்ரீநிதியும் தன்னை கெஸ்ட் ரோலில் நடிக்கத்தான் கூப்பிட்டார்கள் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருவரில் யார் ஹீரோயினாக தொடரப் போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது சீரியலுக்கே எண்ட் கார்டு போட்டு முடித்து வைத்துவிட்டனர். அதிலும், தமயந்தி கதாபாத்திரம் இறந்ததது போல் ப்ரியங்கா நல்காரியின் புகைப்படத்துக்கு மாலையிட்டு கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியுள்ளனர். இதைபார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள எண்ட் கார்டா? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.