ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமான பலரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். அந்த வகையில் கோலங்கள் என்ற சூப்பர் ஹிட் தொடரில் நடித்த அனைவரும் அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பேவரைட்டாக வலம் வந்தனர். கோலங்கள் தொடரில் மனோ கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீதரும், தொடர்ந்து சீரியல், சினிமா என வரிசையாக நடித்து வந்தார். ஆனால், அவருக்கு அதன்பின் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தற்போது ஜோதிடராக மாறிவிட்டார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டியில், லோக்சபா தேர்தலில் யாருக்கு வெற்றி, பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் கோப்பை வெல்லும் அணி எது? என பல கணிப்புகளை வெளியிட்டுள்ளார். மேலும், விரைவிலேயே தனக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும், மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாவேன் என்றும் தன்னை பற்றிய கணிப்பையும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.