பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு |
செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருந்தார். தற்போது பிசினஸில் பிசியாக இருக்கும் நிர்மலா சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு கோடை இடி பட்டம் எவ்வாறு வந்தது? என்ற சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். நிர்மலா பெரியசாமி நான்காம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவாராம். இது அவருக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பள்ளியில் ஸ்மார்ட்டான மாணவியாக வலம் வந்த நிர்மலா படிப்பில் மட்டும் டாப் இல்லையாம் விளையாட்டு, மேடை பேச்சு, நாடகம் என அனைத்திலும் ஒரு கை பார்ப்பாரம். அப்படி ஒருமுறை மேடை நாடகத்தில் கர்ணன் வேடமிட்டு நடித்த போது மைக் இல்லாமலேயே வசனங்களில் வெளுத்து வாங்கினாராம். அதை பார்த்து அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் நிர்மலாவுக்கு கோடை இடி என்ற பட்டப்பெயரை கொடுத்துள்ளார். நாளடைவில் அந்த பெயர் பள்ளிகளிலும் பரவ கோடை இடி நிர்மலா என அனைவரும் அழைத்தனராம்.