லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
‛சுந்தரி' தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து, அந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்னு மேனன், கிருஷ்ணன் ரகுநந்தன் ஆகியோருடன் முதல் சீசனில் நடித்த பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் மூத்த நடிகையான வடிவுக்கரசி வில்லி கதாபாத்திரத்தில் என்ட்ரியானதை தொடர்ந்து கதை விறுவிறுப்படைந்துள்ளது. இதில் மேலும் சுவாரசியத்தை சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகை கவுசல்யாவை மீண்டும் நடிக்க வைத்து வருகின்றனர். கவுசல்யா ஏற்கனவே சீசன் 1-ல் நந்தன் பாரதி என்கிற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது இந்த நந்தன் பாரதி கதாபாத்திரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.