லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் அகிலன் புஷ்பராஜ். ஒருகட்டத்திற்கு மேல் சினிமா வாய்ப்புகள் வர சின்னத்திரையை விட்டு விலகினார். தமிழில் வீரமே வாகை சூடும், பீட்சா 3, பகீரா ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அவர் தற்போது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள ராஜ்தானி பைல்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்று வருகிறார். இதனையொட்டி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அந்த படத்தின் போஸ்டரை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் அவரது வளர்ச்சியை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.