நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரையில் ஒரு காலத்தில் ஹாரர் தொடருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இடையில் சிறிது காலம் ஹாரர் தொடருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஹிந்தி சீரியல்களின் டப்பிங் வருகை மீண்டும் அந்த மார்க்கெட்டை தமிழ் சின்னத்திரையில் உருவாக்கியது. இதனை தொடர்ந்து நந்தினி, அருந்ததி போன்ற தொடர்கள் வெளியாகி வெற்றியடைந்த பின், சமீபத்தில் அனாமிகா என்கிற புத்தம் புதிய ஹாரர் தொடர் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், |தொடர்ந்து எந்த அப்டேட்டும் வராததால் அந்த சீரியல் டிராப் செய்யப்பட்டதாக பலரும் நினைத்தனர்.
இந்நிலையில், தற்போது அனாமிகா தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தொடரில் அக்ஷதா தேஷ்பாண்டே என்கிற புது நடிகை அறிமுகமாகிறார். மேலும், ஆனந்தி சீரியலில் நடித்து வரும் தர்ஷக் கவுடா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திங்களில் நடிக்கின்றனர்.