லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரை உலகில் முடிசூடா ராணியாக வலம் வந்த ராதிகா சரத்குமார், தன்னுடைய ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் சித்தி-2 சீரியலை விட்டு பாதியிலேயே விலகிவிட்ட அவர், அதன்பின் கலைஞர் மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் அவர் தற்போது புதுப்பொலிவுடன் ஹெச்டி தரத்தில் மீண்டு வந்திருக்கும் பொதிகை தொலைக்காட்சிக்காக ‛தாயம்மா குடும்பத்தார்' என்ற தொடரை தயாரித்து நடிக்கிறார். மேலும், இதில் சந்திரமுகி படத்திலும், வேலன் உள்ளிட்ட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் கலக்கிய பிரகர்ஷிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ரசிகர்களுக்கான சர்ப்ரைஸாக அமைத்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள தாயம்மா குடும்பத்தார் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.