கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு விக்ரவாண்டியில் நடத்தினார் விஜய். அதையடுத்து அந்த மாநாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே அவர் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. விஜய் சிறுவனாக இருக்கும்போது அவரது தந்தை எஸ்ஏசி இயக்கிய படங்களில் நான் நடித்தபோது அவரை பார்த்து இருக்கிறேன். ரொம்ப அமைதியாக இருப்பார் . ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் நான் வேறு ஒரு விஜய்யை பார்த்தேன். அந்த அளவுக்கு அவர் ஆவேசமாக காணப்பட்டார். அதோடு திமுகவின் திராவிட மாடலை கடுமையாக விமர்சித்த விஜய், பாஜகவை தாக்குவதை யோசித்து விட்டு தான் பேசுவார் என்று கருதுகிறேன். முக்கியமாக ஈவேராவின் அடிப்படை நாத்திகம் மூடநம்பிக்கையை எதிர்ப்பது தான். அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார். மேலும் விஜய் கட்சியின் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணம் சமத்துவ மக்கள் கட்சி கொடிபோல் உள்ளது. அவர் இதை பயன்படுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன் என்று ராதிகா அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.