ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்ச்சியாக புதுப்புது சீரியல்களை தயாரித்து ஒளிபரப்பு செய்து வருகிறது. அந்த வகையில் நினைத்தேன் வந்தாய் என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் சினிமா நடிகரான கணேஷ் வெங்கட்ராமன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தனா மற்றும் ஜாஸ்மின் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முற்றிலும் புதுகதைக்களத்துடன் வெளியாகவுள்ள இந்த தொடரின் புரோமோ மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரானது வருகிற ஜனவரி 22 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.