சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் நடிகை சுஜிதா தனுஷ். தமிழ் சின்னத்திரைக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருந்த சுஜிதாவுக்கு ரசிகர்களின் ஆதரவும் பெரிதாக கிடைத்தது. ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 முடிவுக்கு பின் சீசன் 2 விலும் அவரே நடிப்பார் என ரசிகர்கள் கருதி வந்த நிலையில் அவருக்கு பதிலாக நிரோஷா தான் நடித்து வருகிறார். இதனால், சுஜிதா தனுஷ் மீண்டும் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் கலைஞர் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள கெளரி என்ற தொடரில் நடிக்க சுஜிதா தனுஷ் கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் சுஜிதாவிற்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.