லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் காவேரி. ஆனால், வெள்ளித்திரையில் அவருக்கு பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு மெட்டி ஒலி சீரியல் தான் அவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்தது. அதன்பின் ஒன்றிரண்டு தொடர்களில் நடித்து வந்த காவேரி திருமணத்திற்கு பின் சின்னத்திரையை விட்டும் விலகிவிட்டார்.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின் பிரபல ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள காவேரி தன் வாழ்வில் நடந்த துன்பகரமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். 'விஜய், அஜித் என் சமகால நண்பர்கள். அவர்களோடு நடிக்க ஆசை. ஆனால், இப்போது அவர்களுக்கு அம்மா கேரக்டரில் தான் நடிக்க முடியும். அதனால் தான் அந்த ஆசையை தள்ளி வைத்துவிட்டேன்' என்று கூறியுள்ளார். தைராய்டு பிரச்னைக்காக சிகிச்சை எடுத்து வரும் காவேரி குணமடைந்து விரைவில் சீரியல்களில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.