ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
'பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் புகழ் பெற்றவர் வினுஷா. இந்த தொடர் முடிந்த உடனேயே அவருக்கு 'பிக் பாஸ்' வாய்ப்பு கிடைத்தது. டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். 'பிக் பாஸ்' வீட்டிற்குள் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தற்போது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் விரும்பித்தான் சென்றேன். ஆனால் நினைத்து சென்றது வேறு, நடந்தது வேறு. உடன் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதம் என்னை காயப்படுத்தியது. எனக்கு முன்னால் கேலி கிண்டல் செய்தவர்களை விட பின்னால் செய்தவர்கள் அதிகம். குழுவாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது சகஜமானது. ஆனால் இந்த முறை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்கள். கன்டென்ட் வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்.
பலரும் என்னை மட்டம் தட்டி எனக்குப் பின்னால் பேசியதால் உண்மையில் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன். அதனால் அமைதியாகி விட்டேன். பிக்பாஸ் என்ற விளையாட்டையும் தாண்டி என்னுடைய மனநலன் முக்கியம் என்று நினைத்தேன். ஆனாலும், அந்த விளையாட்டில் என் முழு திறமையைக் காட்ட முடியாமல் போனது வருத்தம்தான். தற்போது வெளியில் வந்ததும் நிம்மதியை உணர்கிறேன். என்கிறார் வினுஷா.