ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரை பிரபலமான ரேகா நாயர், இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்ததன் மூலம் வைரலானார். தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனுடன் பிரச்னை, வீஜே சித்ரா விவகாரம், நிர்வாணம் பற்றிய கருத்து என இவரை சுற்றி சர்ச்சைகள் எழுந்து அடிக்கடி டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் தனது கடந்தகால சோக வாழ்க்கை குறித்து பேசியுள்ள ரேகா, ‛‛எனக்கு 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. 18 வயதில் எனக்கு மகள் பிறந்தாள். அப்போதே என் கணவர் என்னை விட்டு பிரிந்துவிட்டார். இப்போது எனக்கு 37 வயதாகிறது. 2 வருடங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். இந்த 20 வருடத்தில் பல பெரிய மாற்றங்களை என்னிடம் பார்க்கிறேன். வீடு வாங்கிவிட்டேன், 2 கார்கள் வைத்திருக்கிறேன். முடியாது என்பது இந்த உலகத்தில் இல்லை'' என தன் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். இவ்வளவு கஷ்டத்திலும் துணிச்சலுடன் எதிர்நீச்சல் போட்டு சாதித்த ரேகா நாயருக்கு பலரும் தற்போது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.