நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு. படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து மிகவும் புகழ்பெற்றவர். தற்போது சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக அரசியல், சினிமா, தொலைக்காட்சி தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகன்கள் ஆசிக் மற்றும் ஷாருக்கின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில் ஒருவர் 'உங்க ஆத்துக்காரர் இந்து தானே. ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட இந்து பெயர் வைக்கவில்லை' என்று கேட்டார். அதற்கு பாத்திமா, ஒரு இந்துவ நிக்காஹ் தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் பள்ளி வாசல்ல. ஸோ பொத்திட்டு போ என்பது போல் பதிலளித்தார். இதனால் மிரண்டு போன அந்த நபர் , 'இது பொதுமேடை நான் எதுவும் தவறா கேட்கல' என்று சொல்ல. அதற்கும் பாத்திமா பாபு, 'பொதுமேடைல என்ன ப்ராண்ட் காண்டம் யூஸ் பண்ணறீங்கன்னு கூட கேப்பீங்களோ?' என காட்டமாக பதிவிட்டார். இதனையடுத்து அந்த நபர் பிரச்னை வேண்டாமென அப்படியே விட்டுவிட்டார்.