அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கேப்டன் டிவியின் 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இளைஞர்கள் வட்டாரத்திலும் பிரபலமானவர் திவ்யா கிருஷ்ணன். குழந்தை நட்சத்திரமாக 'கிருஷ்ணதாசி' சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா, தற்போது மீண்டும் நடிகையாக என்ட்ரி கொடுத்து சீரியல் சினிமா என நடித்து வருகிறார். சோஷியல் மீடியாக்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொண்டு 'தினமும் ஒரு திருக்குறள்', நகைச்சுவையான ரீல்ஸ் கான்செப்ட் என புதுப்புது ஐடியாக்களின் மூலம் டிரெண்டிங் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். திவ்யாவை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திவ்யா தற்போது சிவராத்திரியை முன்னிட்டு பெண் அகோரி கெட்டப்பில் கஞ்சா பிடிப்பது போல் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், 'தினமும் ஒரு திருக்குறள்' என நல்ல செயலை செய்துவிட்டு இப்போது புகைப்பது போல் புகைப்படம் போட வேண்டுமா? என சிலர் விமர்சனங்களையும் வைத்து வருகின்றனர்.