லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வருபவர் ஸ்வாதி தாரா. இவர் பிரபல நடிகை இனியாவின் சகோதரி ஆவார். முன்னதாக இவர் தமிழில் 'லக்ஷ்மி ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் அறிமுகமாகியிருந்தார். அதன்பின் தமிழில் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகாத தாரா, தற்போது 'கண்ணான கண்ணே' தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் ஏற்கனவே அவரது தங்கை இனியாவும் சஸ்பென்ஸ் ரோலில் நடித்துள்ளார். இதுவரை அவரது கேரக்டர் காண்பிக்கப்படவில்லை. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுவதால் விரைவில் இனியாவின் கதாபாத்திரமும் காண்பிக்கப்பட உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அக்காவும் தங்கையும் ஒரே சீரியலில் என்ட்ரி கொடுத்து நடித்து வருவதால் வரும் வாரங்களில் பல டுவிஸ்டுகளுடன் 'கண்ணான கண்ணே' தொடர் டிஆர்பியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.