பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் தான் இயக்கி வரும் சீரியல்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லத்தரசிகள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அவர் இயக்கிய தொடர்களில் 'கோலங்கள்', 'அல்லி ராஜ்ஜியம்', 'மாதவி', 'சித்திரம் பேசுதடி' வரிசையில் 'எதிர்நீச்சல்' தொடர் ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து குடும்ப பெண்கள் வெற்றியடைவதை கதைக்களமாக கொண்டுள்ளது. இந்த தொடர் ஒளிபரப்பான முதல் நாளிலிருந்தே கொஞ்சம் கூட தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரை நிறுத்த சொல்லி ஒரு ரசிகையின் கணவர் திருச்செல்வத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'எதிர்நீச்சல் சீரியலை உடனடியாக நிறுத்துங்கள். என்னுடைய மனைவி தினமும் உங்கள் சீரியலை பார்த்துவிட்டு என்னை குணசேகரனாகவும், அவளை ஜனனியாகவும் நினைத்து கொள்கிறாள். அவள் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிவருகிறது' என்று குறிப்பிட்டுள்ளாராம். இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய திருச்செல்வத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்த பேட்டியில் 'இதுபோன்ற கருத்துகள் வருவது சகஜம் தான். ஆனால், நான் சீரியலை நிறுத்தப்போவதில்லை' என்று கூறியுள்ளார்.