நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சின்னத்திரை நடிகர் அர்னவுக்கும் அவரது மனைவி திவ்யா ஸ்ரீதருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் சில நாட்கள் சிறைக்கு சென்றார். தற்போது பெயிலில் ரிலீஸாகியுள்ள அர்னவ், செல்லம்மா தொடரிலேயே ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், 'செல்லம்மா' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற பெண்கள் சிலர் அங்கே அர்னவ்வை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அவர்கள், 'நீங்க எப்போ செல்லம்மாவ கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த குழந்தைய உங்க கூடவே வச்சுக்க போறீங்க?. அந்த மேகாவ துரத்திவிட்ருங்க. அப்போதான் சீரியல் நல்லாருக்கும்' என்று கூறுகின்றனர்.
அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அர்னவின் நிஜவாழ்க்கையும், அவர் நடிக்கும் சீரியலின் கதையும் கிட்டத்தட்ட ஒத்துப்போவதை சுட்டிக்காட்டி 'இவனே பொண்டாட்டிய விரட்டிவிட்டுட்டு ஊர்சுத்திட்டு இருக்கான். இவன போய் ஹீரோன்னு நம்புறாங்களே இந்த அப்பாவி பெண்கள்' என அர்னவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.