நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

2017ம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆறு சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். விக்ரம் படம் திரைக்கு வருவதற்கு முன்பு நான்கு ஆண்டுகளாக கமல் நடிப்பில் எந்த ஒரு படமும் திரைக்கு வராத நிலையில் மக்கள் மத்தியில் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தான் கொண்டு சேர்த்து வந்தது. ஆனால் விக்ரம் படம் திரைக்கு வந்த பிறகு மீண்டும் கமலின் மார்க்கெட் சூடு பிடித்து விட்டது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தபடியாக மணிரத்னம், எச்.வினோத், வெற்றிமாறன், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், மகேஷ் நாராயணன் ஆகியோர் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க போகிறார். இதற்கிடையே லோக்சபா தேர்தல் பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதால் முன்பை விட அதிக பிஸியாகி விட்ட கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது நடைபெற்று வரும் ஆறாவது சீசனோடு முடித்துக் கொள்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6வது சீசனின் இறுதி நாள் அன்று இந்த அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.