'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் |

2018ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான 'பிலி ஹெந்தி' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தேஜஸ்வினி கவுடா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரனும் நானும் தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'கல்யாணம் முதல் காதல் வரை', 'ஈரமான ரோஜாவே 2' தொடர்களில் நடித்தார். தற்போது, 'வித்யா நம்பர் 1 ' தொடரில் நடித்து வருகிறார்.
தேஜஸ்வினி கன்னட தொலைக்காட்சி நடிகர் அமர்தீப் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது நிச்சயிக்கப்பட்டபடி இருவரது திருமணமும் டிச., 14 அன்று நடந்தது. புதுமண தம்பதிகளுக்கு சின்னத்திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.