லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
பிக்பாஸ் சீசன் 6-ல் கடந்த வார எவிக்சனில் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பவர் அசல். சென்னையை சேர்ந்த கானா பாடகரான இவர் பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். முந்தைய சீசனில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த கானா பாடகி இசைவாணி போலவே, அசல் மீதும் மக்கள் நிறைய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால், முதல் வாரம் முதலே அவரது பெயர் டேமேஜ் ஆக ஆரம்பித்துவிட்டது.
பிக்பாஸ் வீட்டில் ஸ்போர்ட்டிவாகவும், கேர்பீரியாகவும் சுற்றிக்கொண்டிருந்த அசல் பெண்களிடம் காட்டிய நெருக்கமானது மக்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 'என்னடா இவன் எப்ப பாரு பொம்பள புள்ளைங்கள நோண்டிட்டே இருக்கான்' என்று டிவிக்கு வெளியே ஒலித்த மக்களின் குரல், கடைசியாக அசலை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே அனுப்ப காரணமாக அமைந்தது. தான் எதற்காக வெளியேற்றப்படுகிறோம் என்று தெரியாமல், அதை கேள்வியாக கமல்ஹாசனிடமே கேட்ட அசலுக்கு கமல்ஹாசன் வெளியே போய் பாருங்கள் புரியும் என்றார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள அசல் நேரலையில் பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டை பற்றியும், அவரது ஆல்பம் பாடல்கள் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அசல், பிக்பாஸ் வீட்டில் தனது செயல்கள் குறித்தும் விளக்கமளித்தார். அப்போது, 'மக்களால் என்ன பாக்க முடியுதோ அதுக்கு தான் அவங்க ரியாக்ட் பண்ணியிருக்காங்க. என் விசயத்துல அவங்க பாத்தது எல்லாம் நான் பொண்ணுங்க கிட்ட போய்ட்டு வேணும்னே நோண்டிட்டு இருக்கிற மாதிரி தான் பாத்துருகாங்க. அவங்களால அததான் பாக்க முடிஞ்சுது. அதுக்கு தான் ரியாக்ட் பண்ணியிருக்காங்க. என் தரப்பு வாதமும் நியாயமும் மக்களுக்கு தெரியாது. நான் என் வீட்ல என்னோட ரிலேஷன்ஸ் கூட எப்படி இருப்பேனோ அப்படி தான் பிக்பாஸ் வீட்டிலயும் இருந்தேன்.
மக்கள் இப்ப நினைக்கிற மாதிரி, நான் தப்பான பார்வையில அந்த பொண்ணுங்கிட்ட அப்படி பண்ணியிருந்தா அவங்க அமைதியா இருந்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? ஒருத்தனோட பார்வையே வச்ச அவன் தப்பா பாக்குறானா? இல்லையான்னு கண்டுபிடிக்கிற பொண்ணுங்க தான் உள்ளே இருந்திருக்காங்க. நான் எதாச்சும் தப்பா பண்ணியிருந்திருந்தா அதெல்லாம் வெளியே வந்திருக்காதா? உள்ளே அவ்ளோ கேமரா இருக்குது. அதுக்கு நடுவுல அந்த மாதிரி எண்ணத்தோட தொட முடியுமா? நான் தெரிஞ்சே பண்ணல. ரொம்ப கஷ்டமாயிருக்கு. நான் பொறந்ததுல இருந்தே இருக்கிற என்னோட கேரக்டர் தான் அது. பொதுவுல அந்த விஷயம் பிடிக்கலன்னா கண்டிப்பா மாத்திக்க முயற்சி பண்றேன்' என்று வருத்தத்துடன் பேசியுள்ளார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது கூட ஜாலியாக இருந்த அசல், அந்த லைவ் வீடியோ முழுவதிலுமே சோகமாக காட்சியளித்தார்.