டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி வெல்லும் திறமை. நடிகை நிக்கி கல்ராணி, பிரபல தற்காப்பு கலை நிபுணர் ஷிஹான் ஹுசைனி மற்றும் நடன இயக்குனரான ஸ்ரீதர் ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார்கள்.
பல்வேறு தனி நபர்கள், குழுக்கள் ஆகியவற்றின் சாகச நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு தேர்வானவர்களை கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி நாளை (அக்.30) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து நிக்கி கல்ராணி கூறியிருப்பதாவது: நாட்டின் மூலை முடுக்கிலிருந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் திறமைகளை கொண்டு வந்த பன்முகத்தன்மை கொண்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். கலர்ஸ் தமிழ் சேனலானது, வெல்லும் திறமை மூலம் திறமையான வல்லுனர்களின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இறுதிச்சுற்றில் பல சர்ப்ரைஸ்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. என்றார்.