என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கேரளாவை சேர்ந்த வித்யா மோகன் தமிழில் சில படங்களில் நடித்தார். வெள்ளித்திரை அவருக்கு கைகொடுக்காத நிலையில் சின்னத்திரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிட் சீரியல்களில் லீட் ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த 'வள்ளி' நெடுந்தொடர் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது 'அபியும் நானும்' தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யா மோகன், இனி தாலியை கழட்டி விட்டு நடிக்கமாட்டேன் என ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறியிருக்கிறார். 'என் தாலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு அவர் போட்ட முதல் செயின். அதை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன். அப்படியொரு நிலை வந்தால் அந்த புராஜெக்டையே வேண்டாம் என கூறிவிடுவேன்' என கூறுகிறார். இந்த பேட்டியை பார்க்கும் பலரும் வித்யா மோகனுக்கு தாலி மீது இருக்கும் செண்டிமெண்டையும் கலாச்சாரத்தை மதிக்கும் அவரது குணத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.