பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சின்னத்திரை நடிகையான சாய் காயத்ரி விஜய் டிவியின் பல ஹிட் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ரசிகர்களின் பேவரைட் சீரியலான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் ஆதரவையும் பெற்று வருகிறார். அண்மையில் இந்த தொடரின் ஆயிரமாவது எபிசோடுக்கான வெற்றிவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதில், தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருக்கும் அவரது குடும்பத்தினர் கைகளாலேயே நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நடிகை சாய் காயத்ரியின் அம்மாவும், சகோதரியும் மேடைக்கு வந்து சாய் காயத்ரிக்கு பரிசு வழங்கினர். அப்போது உணர்ச்சிவசப்பட்ட சாய் காயத்ரி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என்றும், ஏற்கனவே, இரண்டு நடிகைகள் அந்த கதாபாத்திரத்தில் மாறிவிட்டதால், நேயர்கள் மத்தியில் நெகட்டிவாக பேசப்படும் என்றும் தடுத்துள்ளனர். ஆனால், அதையும் மீறி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிப்பதற்காகவே வீட்டைவிட்டு வெளியேறி மூன்று மாதங்கள் தனியாக தங்கி சீரியலில் நடித்ததாக அப்போது கூறினார். சாய் காய்த்ரி பேசிய அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பிரபல எழுத்தாளரும் விஜய் டிவியில் பல சீரியல்களும் எழுதி வரும் எழுத்தாளர் ப்ரியா தம்பி, '20 ஆண்டுகளுக்கு முன்னால் எங்களால் முடியாததை சாய் காயத்ரி செய்துள்ளார். அவரது திறமையை விஜய் டிவி மதித்து கவுரவப்படுத்தியுள்ளது. இவர்களை போல் கனவுகளோடு போராடும் பெண்களுக்கு தோள் கொடுத்து மதிப்பு தருபவர்கள் சிலரே' என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.