23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
சின்னத்திரை நடிகைகளில் ரசிகர்கள் மனதில் டாப் லிஸ்டில் நிற்பவர் ரோஷினி ஹரிப்பிரியன். கருப்பு நிற கட்டழகியான ரோஷினி, பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் புகழ் பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த போது அவர் தவறவிட்ட சினிமா கதாபாத்திரங்கள் அனைத்துமே பின்னாளில் வேற லெவலில் ரீச்சானது. எனவே, தற்போது முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும், பிரபல காமெடி குக் ஷோவான குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இன்ஸ்டாவிலும் விடாமல் போட்டோஷூட்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வரும் ரோஷினி, கேரளா ஸ்டைலில் வெள்ளை புடவை கட்டி அசத்தலான சில புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அப்புறம் என்ன வழக்கம் போல் நெட்டீசன்கள் 'இனி எண்ட ஸ்டேட் கேரளா' என கமெண்டில் காமெடி செய்து வருகின்றனர்.