கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை |
முன்னணி சேனலான ஜீ தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடிக்க நடிகர், நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தேர்வுக்காக மெகா ஆடிசன் ஒன்றை நடத்துகிறது. இதில் 18 வயது முதல் 45 வயது வரையிலான யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
இந்த தேர்வு சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் நடக்கிறது. "தமிழகம் முழுவதும் உள்ள திறமையுள்ள ஆண், பெண் இரு பாலரும் வரவிருக்கும் ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர், நடிகையாகவோ, நகைச்சுவை நடிகர், தொகுப்பாளர் அல்லது துணை நடிகராகவோ இருப்பதற்கான வாய்ப்புக்கு இந்த ஆடிஷன் ஒரு மேடையாக இருக்கும். ஜீ தமிழின் மிகப்பெரிய திறமை வேட்டையின் மூலம் அடுத்த பெரிய சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்ற உங்கள் கனவுகளுக்கு ஒரு படி மேலே செல்லுங்கள்" என்கிறது ஜீ தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கை.