பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறது ஜீ தமிழ். அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரண்டு சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ளது.
மதியம் நேரம் ஒளிபரப்பாகி வந்த 'என்றென்றும் புன்னகை' தொடர் நாளை சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடரில் நக்ஷத்திரா, கவிதா, விஷ்ணுகாந்த், நிதின் ஐயர், சுஷ்மா நாயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதேபோல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' தொடரும் வருகிற 14 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆஷா கௌடா, நந்த கோபால் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்தனர்.
ஹிட் தொடர்கள் இரண்டும் அடுத்தடுத்த முடிவுக்கு வரவுள்ள நிலையில், இவற்றின் வெற்றிடத்தை புது சீரியல்கள் நிரப்புமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுத்துள்ளது.




