ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
விஜய் டிவியை பொறுத்தமட்டில் ஒரு ரியாலிட்டி ஷோ ஹிட் அடித்துவிட்டால் அதில் புகழ் பெற்ற பிரபலங்களை வைத்தே இன்னொரு ஷோ வை நடத்தி அதையும் ஹிட் கொடுத்து விடுவார்கள். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் நபர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியும், குக் வித் கோமாளி பிரபலங்களை வைத்து காமெடி ராஜா கலக்கல் ராணி என்கிற நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கினர். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி முடிந்துள்ளதையடுத்து அதில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நடன நிகழ்ச்சி உருவாகியுள்ளது.
இம்முறை இதில் பிக்பாஸ் பிரபலங்களோடு ரியல் ஜோடிகளும் கலந்து கொள்கின்றனர். அதாவது சுஜா வருணி, ஆர்த்தி, தாமரை ஆகியோர் தங்களது கணவர்களுடன் கலந்து கொள்கின்றனர். போட்டியின் வெற்றியாளரான ராஜூவும், ரன்னர் அப் பட்டம் வென்ற ப்ரியங்காவும் தொகுத்து வழங்க உள்ளனர். அத்துடன் அபிஷேக், சுருதி, ஐக்கி பெர்ரி, தேவ், இசைவாணி, வேல்முருகன், பாவனி, அமீர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். போட்டியின் நடுவர்கள் யார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 வருகிற மே 8 ஆம் தேதியிலிருந்து இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.