போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் 'யாரடி நீ மோகினி'. இதில் ஹீரோவாக ஸ்ரீகுமாரும், வில்லியாக சைத்ரா ரெட்டியும் அசத்தியிருந்தனர். அதிலும் சைத்ரா ரெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்களின் பெருத்த ஆதரவுக்கு மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்த தொடர் சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவுற்றது. இந்நிலையில் சைத்ரா ரெட்டியும், ஸ்ரீகுமாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்துவிட்டு இருவரும் புது சீரியலில் நடிக்கிறார்களா? அல்லது யாரடி நீ மோகினி சீசன் 2 வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் எந்த புதிய சீரியலிலும் சேர்ந்து நடிக்கவில்லை. யாரடி நீ மோகினி முடிவுற்ற பின் சைத்ரா ரெட்டி 'கயல்' தொடரிலும், ஸ்ரீகுமார் 'வானத்தைப் போல' தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களுமே ஒரே டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள். எனவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து கொண்ட இருவரும் நட்பின் அடிப்படையில் செல்பி எடுத்துக் கொண்டு பகிர்ந்துள்ளனர்.