2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

சின்னத்திரையில் ராஜ்கமல் - லதா ராவ் தம்பதியினரை யாராலும் மறக்க முடியாது. இருவரும் இணைந்து பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளனர். 40 வயதிற்கும் மேலான லதா ராவ் இப்போது இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். திறமையான நடிகையான லதா ராவுக்கு இளைஞர் ரசிகர் கூட்டம் இன்றளவும் உள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்த லதா ராவ் சில காலங்களாக நடிப்பதிலிருந்து முற்றிலுமாக விலகி இருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது விஜய் டிவி சீரியலில் கம்பேக் கொடுத்துள்ளார். விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகனின் அக்கா சித்ரா கதாபாத்திரத்தில் இதுநாள் வரை ஹாசினி நடித்து வந்தார். அவர் திடீரென சீரியலை விட்டு விலகிவிட அவருக்கு பதிலாக தற்போது லதா ராவ் நடிக்கவுள்ளார்.
ஹாசினி தற்போது ஜீ தமிழின் 'தவமாய் தவமிருந்து' சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இதன் காரணமாக தான் அவர் விஜய் டிவி சீரியலை விட்டு விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.