அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
விஜய் டிவி ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'சிப்பிக்குள் முத்து' சீரியல் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக அந்த தொடரின் புரோமோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் உலா வருகிறது. இந்த தொடரின் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருந்த நிலையில், சீரியலின் ப்ரோமோ கதையின் ஒன்லைனை சொல்கிறது. இந்த ப்ரோமோ வுக்கு பரவலாக கருத்துகள் வந்த வண்ணம் உள்ளது.
எனினும், பலர் சீரியலில் வரும் தங்கை கதாபாத்திரத்தை சேடிஸ்ட் கதாபாத்திரம் என இப்போதே திட்ட ஆரம்பித்துவிட்டனர். காரணம் தனது காதல் வாழ்க்கைக்காக அக்காவின் சுய விருப்பத்தை பற்றி கவலைப்படாமல் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை திருமணம் செய்ய நிர்பந்திக்கிறாள் தங்கை. டேக்லைனில் என்ன தான் சகோதரிகளின் பாச கதை என்று போட்டிருந்தாலும் பின்னாட்களில் அக்காவிற்கு எதிராக தங்கை மனம் மாறுவது உறுதி. கிட்டத்தட்ட காவ்யாஞ்சலி ஸ்டைலில் அமைதியான அக்கா, அடாவடியான தங்கை என கதையமைப்பு உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.