சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

ஒரே சீரியலில் நடித்த ஜோடிகள் சமீபத்தில் வரிசையாக கல்யாணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஒரே டிவியில் வேறு வேறு சீரியலில் நடித்த நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா ஆகிய இரண்டு தொடர்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்கள். இதில் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவுக்கு டார்ச்சர் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரவீன். வில்லியை டார்ச்சர் செய்யும் கேரக்டர் என்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பேவரைட். அதேபோல் ராஜா ராணி முதல் சீசனில் ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ப்ரவீனும், ஐஸ்வர்யாவும் பல நாட்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திடீரென சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணத்தில் விஜய் டிவியின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் சுற்றி வருகின்றன.