AA26 - A6, இத்தனை கோடி பட்ஜெட்டா : உலா வரும் தகவல் | பெண் சாமியார் வேடத்தில் தமன்னா : ஒடேலா 2 டிரைலர் வெளியானது | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் ஜூனியர் என்டிஆரின் 31வது படம் | அல்லு அர்ஜுனின் அபார வளர்ச்சி : சமந்தா வெளியிட்ட பதிவு | அஜித் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் | நடிகர் 'லொள்ளு சபா' ஆண்டனி காலமானார் | டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மகிழ்ச்சியே வாழ்க்கைக்கு சிறந்த மருந்து : ரகுல் பிரீத் சிங் | ஏப்., 18ல் ரெட்ரோ இசை வெளியீடு | சர்வதேச சினிமா தொழில்நுட்ப கண்காட்சியில் கமல் |
பிக்பாஸ் வீட்டில் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நபராக எலிமினேட் ஆகி வருகின்றனர். இதன் காரணமாக மீதமிருக்கும் நபர்களுக்கு தாங்கள் எலிமினேட் ஆகி விடுவோமோ என்ற பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழுக்களாக பிரிந்து சண்டைகளும் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் வீட்டின் தலைவராக இமான் அண்ணாச்சி தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால், நிரூப் தனது சலுகையை பயன்படுத்தி வீட்டின் தலைவராக மாறிவிட்டார். நிரூப் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொன்ன அண்ணாச்சி தோல்வி பயத்தால் நிரூப்பை வாயா போயா என்று பேசிவிட்டார். மேலும், 'பவரை அவங்க மிஸ் யூஸ் பண்ணுவாங்க. இதை வச்சு பழி வாங்குவாங்க' என்று இமான் அண்ணாச்சி பேசியுள்ளார். நிரூப்பின் தலைமையை ஏற்க விரும்பாத வருண் அண்ணாச்சி டீமில் சேர்ந்து ஓவர் பெர்பார்மென்ஸ் செய்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் எலிமினேட் ஆகாமல் இருக்க போட்டியாளர்கள் அனைவரும் தற்போது மக்களின் ஓட்டுகளையே நம்பி வருகின்றனர். எனவே அதிக ஓட்டுகளை வாங்குவதற்காக முயற்சிகளும் எடுத்து வருகின்றனர். தோல்வி பயம் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பது போல பிக்பாஸ் வீட்டில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.