கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா |
சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் மாயோன். கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, பக்ஸ், ஹரீஷ் பேரடி மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தை என்.கிஷோர் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் பார்வையற்றோரும் படத்தை உணரும் வகையில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆடியோ வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. பார்வையற்றவர்கள் தியேட்டரில் படம் பார்க்கும்போது அவர்கள் அமர்ந்திருக்கும் சீட்டில் இயர்போன் இருக்கும். அதை அவர்கள் காதில் மாட்டிக் கொண்டால் திரையில் நடக்கும் காட்சிகள் அவர்களுக்கு விவரிக்கப்படும். இந்த தொழில்நுட்பம் வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே சைக்கோ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மாயோன் படத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து இந்த பணியை செய்துள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளியான இளங்கோ கூறியதாவது: இந்த டீசர் ஆடியோ விளக்கத்துடன் வெளியாகவுள்ளது. பொதுவாக இது பரவலாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. அனைவரும் ரசிக்கும் சினிமாவை மாற்றுத்திறனாளிகளும் ரசிக்க வேண்டும். இந்த படத்தில் டீசரில் வரும் குரலை நான் தான் பேசியுள்ளேன்.
வெளிநாடுகளில் முழுப்படங்களிலும் ஆடியோ விளக்கம் தருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தனி கருவிகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரசிக்கும் படி ஆடியோ விளக்கம் செய்து வருகிறார்கள். அதில் தமிழகத்தில் முன்னோடியாக அருண்மொழி மாணிக்கம் சைக்கோ படத்தில், முழு படத்திற்கும் ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கியிருந்தார். அவருக்கு நன்றி. இவ்வாறு கூறினார்.