ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை |

நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மீண்டும் மோதலில் இறங்கிவிட்டனர். சமீபத்தில் மருத்துவமனையில் அஜித்தை வீடியோ எடுத்த விவகாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் அஜித் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர். ‛என் நிலைமைக்கு அஜித் தான் காரணம்' என அப்பெண் குற்றம் சாட்டினார். இதுகுறித்த வீடியோவும் வெளியானது.
இதை விஜய் ரசிகர்கள், ‛வாழ விடுங்க அஜித்' என்ற தலைப்பில் டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கினர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள், விஜய் குடும்ப பிரச்னையை கையில் எடுத்தனர். டுவிட்டரில், ‛பெத்தவர்ட்ட பேசுங்க விஜய்' என்ற தலைப்பை டிரெண் செய்தனர். சம்பந்தப்பட்ட நடிகர்களை பொறுத்தவரை சீரியஸான இப்பிரச்னை, டுவிட்டரில் பொழுதுபோக்கு பிரிவில் போட்டி போட்டு முதலிரண்டு இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.