நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த மலையாள திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு பெரும்பாலும் பிற மொழி சினிமா கலைஞர்களை நியமித்து வருகிறது. பாரதிராஜா, கே.பாக்யராஜ், பாலச்சந்தர், மகேந்திரன் உள்ளிட்ட பலர் தலைவராக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு நடிகை சுஹாசினியை கேரள அரசு நியமித்துள்ளது. கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த கமிட்டியில் கன்னட இயக்குனர் சேஷாத்திரி, மலையாள இயக்குனர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளிதரன், இசை அமைப்பாளர் மோகன் சித்ரா, ஒளிப்பதிவாளர் ஹரிகுமார், கதாசிரியர் சசிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சுஹாசினி சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடுவராக பணியாற்றி உள்ளார்.