ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் ஆபாச நடன வீடியோக்கள் வெளியிட்டு புகழ்பெற்றவர் இலக்கியா. இதற்கு முன்பு அவர் சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தாலும் முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கும் படம் நீ சுடத்தான் வந்தியா. இப்படத்தைத் தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அருண்குமார். துரைராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்தைப் 4 பேர் கொண்ட தணிக்கை குழுவினர் பார்த்தனர். அவர்களால் முடிவெடுக்க முடியாததால் அதன் பிறகு 8 பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது. இறுதியில் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இலக்கியா கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன் .சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது . படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். என்றார்.