ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் மூலம் பார்த்திபனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சந்தோஷ் பிரதாப். அதன்பிறகு தாயம், பயமா இருக்கு, மிஸ்டர்.சந்திரமவுலி, தேவ், ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் சார்பட்டா பரம்பரைதான் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
தற்போது ஏன் கனவே என்ற மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்திருக்கிறார். இதில் சந்தோஷ் பிரதாப் ஜோடியாக புதுமுக நடிகை சுவதிஸ்டா நடித்திருக்கிறார். உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்யும் புது மண தம்பதிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் வகையில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
யாஞ்சி யாஞ்சி, ராசாளியே, ஆளப்போறான் தமிழன் போன்ற பாடல்களைப் பாடிய சத்யபிரகாஷ் பாடியுள்ளார், ராகேஷ் இசை அமைத்துள்ளார். விஜய் நடித்த ஜில்லா, புலி போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய டி.ஆர்.பாலா இயக்கியிருக்கிறார் . ஆல்பம் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகும் என்று குழு அறிவித்துள்ளனர்.