ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாளத்தில் முன்னணி நடிகை மம்தா மோகன்தாஸ் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவப்பதிகாரம், குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தார். தற்போது எனிமி, ஊமை விழிகள் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் நடித்து முடித்துள்ள ஜனகனமன, மியாவ், லால்பக், அன்லாக் படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. ஜோதன், பிலால், அப்போஸ்தலன், ராம் சேது படங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் 1.5 கோடி மதிப்பிலான போர்ச்சே 911 கரேரா என்ற வெளிநாட்டு காரை வாங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நமது கனவு ஒரு நாள் நிறைவேறும் என்பார்கள். இப்போது எனது நீண் நாள் கனவு நிறைவேறியிருக்கிறது. எங்கள் வீட்டிற்கு புதிய குழந்தை வந்திருக்கிறது. இதற்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.