நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமாவின் காதல் ஜோடியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இன்று(செப்., 27) காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பெருமாளை தரிசித்து விட்டு கோயிலில் இருந்து வெளியில் வந்தது முதல் அவர்களது காரில் ஏறும் வரை வீடியோகிராபர்களும், போட்டோகிராபர்களும் விடாமல் 'க்ளிக்'கிக் கொண்டே இருந்தனர். இருவரும் பொறுமையாக அனைவருக்கும் 'போஸ்' கொடுத்தனர்.
நடுவில் கொஞ்சம் வயதான ரசிகர் ஒருவர் நயன்தாராவுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கேட்க, அந்த ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார் நயன்தாரா. நயனும், சிவனும் கைகோர்த்தபடியே தான் நடந்து வந்தனர். அவர்களுக்கு பாதுகாவலர்களாக சிலரும் கூடவே நடந்து வந்தனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தில் உள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவரது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து வேண்டுதலுக்காக அவர் திருப்பதி சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
சமந்தா சமீபத்தில் திருப்பதி சென்ற போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டு, அவரை சமந்தா திட்டிய வீடியோக்கள் வைரலாகின. இந்நிலையில் இன்று நயன்தாராவிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி யாரும் எந்த கேள்வியும், கேட்கவில்லை.