100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
சமீபகாலமாக சமந்தாவை சுற்றி பல விமர்சனங்கள் சுழன்றடித்து வருகின்றன. இந்தநிலையில் அவற்றிலிருந்து சற்றே ஆசுவாசம் பெறும் விதமாக சிறந்த நடிகைக்கான சைமா விருதை வென்றுள்ளார் சமந்தா கடந்த 2019ல் அவர் நடித்த ஓ பேபி என்கிற படத்திற்காக தான் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் புதிய முயற்சியாக படம் முழுதும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.
அப்படி ஒரு காமெடி கேரக்டரில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்தது பற்றி சமந்தா கூறும்போது, “எமோஷனலான கதாபாத்திரங்களில் நடிப்பதை விட காமெடியாக நடிப்பது ரொம்பவே கஷ்டமானது. டைமிங் சென்ஸ் முக்கியம்.. எந்த இடத்தில் இடைவெளி விடவேண்டும் என்பது தெரிய வேண்டும்.. முன்னெப்போதையும் விட ஓ பேபி படத்தில் நடித்த பிறகு நகைச்சுவை நடிகர்களை நான் ரொம்பவே பாராட்டுகிறேன்” என கூறியுள்ளார் சமந்தா.