சம்பளத்தை உயர்த்தினாரா ருக்மணி வசந்த்? | டாக்சிக் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம் விற்பனை | ஜியோ படத்தில் நாயகியாக இவானா | ஸ்பிரிட் படத்தில் வில்லன் ஆக விவேக் ஓபராய் | 'கர' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ், ஐசரி கணேஷ் | டாக்சிக் முதல் பாடல் மார்ச் 2ல் வெளியாகிறது | தமிழ் வெப் சீரிஸ்களில் முன்னணி நடிகர்கள் | தமிழ் சினிமாவில் தொடரும் விவாகரத்து… | விஜய்சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் முத்து என்கிற காட்டான் : டீசர் வெளியீடு | ரோபோ சங்கர் இறுதி சடங்கு : உருக்கமாக பேசிய விமல் |

அஜித்குமார் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்தது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பு மட்டுமல்லாமல், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என தன் திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் அஜித். இந்த நிலையில் டில்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அஜித் டில்லி சென்றார்.
இந்த போட்டியின் பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க சூழ்ந்துக் கொண்டனர். அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட, மிகப்பெரிய அளவில் வைரலானது.