கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பிடித்தவர் விஜய் சேதுபதி. சின்னச்சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் தனி நாயகனாக நடித்து கவனம் பெற்றார். அதன்பின் அவர் நாயகனாக நடித்து 2012ல் வெளிவந்த 'பீட்சா' படம் அவருக்கு பெரிய திருப்புமுனையைப் பெற்றுத் தந்தது.
அதன்பின் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தடுத்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அவரைப் பற்றி அதிகம் பேச வைத்தார். அதன்பிறகு, கடந்த சில வருடங்களில் அதிகப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் விஜய் சேதுபதி.
2018ல் வெளிவந்த '96' படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்கள் பெரிய வெற்றயைப் பெறவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் வில்லனாகத்தான் நடித்திருந்தார். அப்படத்தில் கூட அவரது வில்லத்தன நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
அந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடித்து கடந்த பத்து நாட்களில் 'லாபம்' படம் தியேட்டரிலும், 'துக்ளக் தர்பார்' படம் டிவியிலும், 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடி தளத்திலும் வெளியானது. இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படங்களைப் பற்றி விமர்சகர்கள் விமர்சித்ததை விட ரசிகர்கள் மிகக் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.
விஜய் சேதுபதிக்கு என்ன ஆச்சு, ஏன் இது மாதிரியான படங்களில் அவர் நடிக்கிறார். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தவில்லையா என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூன்று படங்களிலுமே அவருடைய நடிப்பு சரியில்லை என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது. இதெல்லாம் விஜய் சேதுபதி கவனிப்பாரா, அல்லது அவர் போக்கில் செல்வாரா?. விஜய் சேதுபதி நடித்துள்ள 'கடைசி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர்,' படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.