'குடும்பஸ்தன்' 50வது நாள்: கொண்டாடிய படக்குழு | 'கூலி' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | 'கைதி 2' அப்டேட் தந்த கார்த்தி | ஏஆர் ரஹ்மானுக்கு திடீர் உடல்நலக்குறைவு: நலமாக உள்ளதாக குடும்பத்தினர் தகவல் | 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்து விலகியதா லைக்கா? | டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக காதல் ஜோடிகளாக பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா. கொரானோவுக்கு முன்பு இருவரும் வெளிநாடுகளுக்குச் சென்று பல புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
கொரானோ கால கட்டத்தில் தனி விமானத்தில் பறந்து சென்று தங்களைப் பற்றி பேச வைத்தனர். சில தினங்களுக்கு முன்பு நயன்தராவின் அம்மா பிறந்தநாளைக் கொண்டாடியது இந்த காதல் ஜோடி. இன்று(செப்., 18) இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். அதற்காக பெரிய கேக் ஒன்றை வைத்து காதல் ஜோடி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இருவரும் கட்டிபிடித்தபடியான சில புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
அதை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பதிவிட்டு, “நன்றி தங்கமே, இந்த அற்புதமான பிறந்தநாளை ஆச்சரியமாக்கியதற்கு...என்னுடைய வாழ்வில் நீ இருப்பதற்கு ஈடிணையில்லாத பரிசு வேறு எதுவுமில்லை. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் 'டூ டூ டூ' பாடல் வெளியாகிறது.