ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சூர்யா- ஜோதிகா ஆகிய இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது. காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் உள்பட 7 படங்களில் நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2006 செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சூர்யா-ஜோதிகாவின் 15வது திருமண நாள் ஆகும்.
இந்த நிலையில் சூர்யாவின் புகைப்படத்துடன் ஆண் சிங்கம் ஒன்று பெண் சிங்கத்தை கட்டியணைத்தபடி இருப்பது போன்று தான் வரைந்த ஒரு புகைப்படத்தை சூர்யாவுக்கு திருமண நாள் பரிசாக வழங்கியுள்ள ஜோதிகா, இதை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சூர்யா குறித்த சில நெகிழ்ச்சி பதிவும் போட்டுள்ளார்.

அதில், சரியான நபரை சந்திப்பது அவரவர் விதி. அவருக்கு மனைவியாக வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு. ஆனால் ஒவ்வொரு நாளும் அவரிடம் காதலில் விழுவது என்னை மீறி நடக்கும் செயல். எப்போதும் அவர் அவராகவே இருப்பதினால்தான் இது சாத்தியமாகிறது. எங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாக, எனக்கு சிறந்த கணவராக, சில நேரங்களில் எனது அப்பா அம்மாவாகவும் இருக்கும் எனது வாழ்நாள் நண்பனுக்கு எனது சிங்கத்துக்கு திருமண நாளில் ஒரு குட்டிப்பரிசு, என்று பதிவிட்டுள்ளார் ஜோதிகா.