நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த படம் தெலுங்கில் உருவானாலும் கூட தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் இந்தியிலும் பான் இந்தியா படமாகத்தான் உருவாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் திரைக்கதை மற்றும் தமிழில் வசனம் எழுதும் கூட்டணியில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாடி ராசாத்தி, அடியே அழகே என மென்மையான பாடல்களை எழுதிய விவேக் அதன் பிறகு ரஜினிக்கு மரண மாஸ், விஜய்க்கு சிம்டாங்காரன் என அதிரடியான பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானார். இந்தநிலையில், திரைக்கதை உருவாக்கம் மற்றும் வசனம் எழுதுவது என தனது எல்லையை விரிவுபடுத்தி உள்ளார் விவேக். அது இயக்குனர் ஷங்கர் படத்தின் மூலமாக நிறைவேறி இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள விவேக், இந்த படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றது என கூறியுள்ளார்.