துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சென்னையில் பிரபலமான சரவணா ஸ்டோர் அதிபர் நடிக்கும் படத்தை ஜெடி-ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கி வருகிறார்கள். ஊர்வசி ரவுட்லா, பிரபு நடிக்கும் இந்த படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் நண்பராக விவேக் நடித்து வந்தார். இதனால் படம் முழுக்க அவர் அண்ணாச்சியுடன் வரும் காட்சிகள் இடம் பெறுகிறது.
70 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விவேக் மரணம் அடைந்து விட்டதால், விவேக் கேரக்டரை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கி வருகிறார்கள். விவேக்கின் சாயல் கொண்ட ஒருவரை நடிக்க வைத்து, பின்னர் அதனை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதை விவேக் கேரக்டராக மறு உருவாக்கம் செய்கிறார்கள். என்றாலும் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகளை குறைக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுபோன்ற முயற்சிகள் தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. பத்ரகாளி படத்தில் நடித்துக் கொண்டிருந்த ராணி சந்திரா விமான விபத்தில் மறைந்ததை தொடர்ந்து அந்த படத்தில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் அவரை போன்ற தோற்றம் கொண்ட நடிகையை நடிக்க வைத்து லாங் ஷாட் மற்றும், பேக் ஷாட் வகையில் எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. தற்போதைய நவீன தொழில்நுட்பம் இதனை எளிமையாக்கி உள்ளது.
ஆனால் இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு புதிய நடிகர் அந்த காட்சியில் நடிக்க இருப்பதாக ஷங்கர் ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.