வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சென்னை: நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் இருவரும் ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள், மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தன.புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு, மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக்கு ஆஜராகாமல், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கேரளாவில் தலைமறைவாகினர். 14ம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில் மீரா மிதுன் கூறியுள்ளதாவது: என்னைப் பற்றி அவதுாறாக செய்தி பரப்பியதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைப் பற்றி பேசி விட்டேன். பின்னர், பேசியது தவறு என கூறி விட்டேன். ஆனால், சொல்லாத வார்த்தைகளை பேசியதாக, புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, எனக்கு ஜாமின் வழங்க வேண்டும்.
அதோடு தான் தற்போது சிறையில் இருப்பதால் நடித்து வரும் படங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு என்னால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ள மீராமிதுன், நீதிமன்றம் தனக்கு அளிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுவதாகவும், சாட்சிகளை கலைக்க மாட்டோம் என்றும் அந்த மனுவில் மீரா மிதுன், சான் அபிஷேக் ஆகிய இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மீரா மிதுன் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, வழக்கை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.