ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! |
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக பேசப்படும் ஷங்கர், அடுத்து தன்னை பான் - இந்தியா இயக்குனராக மாற்றிக் கொள்ள தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படம் தெலுங்கில் தயாராகி வரும் மற்ற பான்-இந்தியா படங்களைப் போல தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்றபடி படத்தில் நட்சத்திரங்களைச் சேர்க்க ஷங்கர் முடிவு செய்துள்ளாராம். தெலுங்கிற்காக நாயகன் ராம் சரண், ஹிந்திக்காக கதாநாயகி கியாரா அத்வானி, அது போல மற்ற மொழிகளிலிருந்தும் சில பிரபலங்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க உள்ளார்களாம்.
அதனால், படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகரான பகத் பாசிலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் நடிக்க சம்மதிப்பார் என எதிர்பார்க்கிறார்களாம். பகத் தற்போது 'புஷ்பா' படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். எனவே, இந்தப் படத்திலும் நடிக்க சம்மதிப்பார் எனத் தெரிகிறது. ஷங்கர் படம் என்பதாலும், தெலுங்கில் முன்னணி நடிகரான ராம் சரண் படம் என்பதாலும் சம்மதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
தமிழில் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பகத் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.